திட்டம் மற்றும் செயற்பாடுகள்

மத்திய மலைநாட்டில் கண்டி ,பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள தரமற்ற விவசாயக் காணி புனரமைக்கும் திட்டம் (GCP/SRL/063/GEF)

GCP/SRL/063/GEF திட்டம் தற்பொழுது காணப்படும் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பிற்குள்ளேயும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுடன் இணைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. .
இதன் கீழ் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து இலங்கையில் மத்திய மலைநாட்டிலுள்ள சுமார் 50 வீதமான தரமற்ற விவசாய காணிகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பூகோள சுற்றாடல் வசதி (GEF) திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டத்திற்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்குகிறது.
இந்தத் திட்டத்தினூடாக மத்திய மலைநாட்டில் கடுமையான தரவீழ்ச்சிக்கு உள்ளாகும் விவசாய காணிகள் உள்ளிட்ட கண்டி,பதுளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலுள்ள 579, 384 விவசாய காணிகளை புனரமைத்து வருகிறது.
இந்தத் திட்டம் சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம்,இயற்கை வள முகாமைத்துவ நிலையம், மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவனம் மற்றும் தொடர்புள்ள நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.
இத்திட்டம் கீழ்வரும் விடயங்களை குறிக்கோளாகக் கொண்டது.

  • நிலையான நில முகாமைத்துவத்திற்கு தேவையான நிறுவன கட்டமைப்பு மற்றும் கொள்கை, மேற்பார்வை கட்டமைப்பை பலப்படுத்துதல்
  • அடையாளங் காணப்பட்ட பேண்தகு நில முகாமைத்துவ தொழில்நுட்பமொன்றை செயற்படுத்துதல்
  • நிலையான நில முகாமைத்துவ மேம்பாட்டிற்காக புதிய நிதி முறை அறிமுகம் செய்தல்
  • அறிவு முகாமைத்துவம் , அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சிறந்த விவாசாய பழக்கங்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பு வழங்குதல்
திட்டத்தின் சுற்றாடல் குறிக்கோள்

இலங்கையில் மத்திய மலைநாட்டின் கண்டி,பதுளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் மண்தர இறக்கத்தை தடுத்தல் மற்றும் மண் தர இறக்க நிலைமைய சீரமைத்தல்

திட்டத்தின் அபிவிருத்திக் குறிக்கோள்

பேண்தகு நில முகாமைத்துவ முறைமைகளை மேம்படுத்தி சுற்றாடல் கட்டமைப்பினூடாக பெற்றுக் கொள்ளும் பொருட்கள் மற்றும் சேவை வழங்களை அதிகரித்தல் மற்றும் மத்திய மலைநாட்டில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தல்

தகவல் சாராம்சம்
வள பங்களிப்பு

பூகோள சுற்றாடல் வசதி

செயற்படுத்தும் நிறுவனம்

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு

தொடர்புள்ள மைய அரச நிறுவனம்

சுற்றாடல் அமைச்சு

பங்காளர்கள்

நில முகாமைத்துவத்துடன் தொடர்புள்ள சகல அரச நிறுவனங்கள்

செயற்படுத்தும் காலம்

2016 ஜூன் - 2020 ஜூன்

திட்டம் செயற்படுத்தப்படும் பிரதேசம்

கண்டி,பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்

 

Project Organogram