Approved final

புதிய SLM தொழில்நுட்பங்கள் மற்றும் நல்ல விவசாய நடைமுறைகளைப் பின்பற்றும் போது காய்கறி விவசாயிகள் சந்திக்கும் தடைகளை தனியார்-பொது கூட்டுப் பங்காண்மை வெற்றி காண்கின்றது. சந்தைப்படுத்தல், மதிப்பு கூட்டல், சான்றளிப்பு மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் தனியார் துறை உதவுகிறது. டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி (உதாரணமாக) உழவர் களப் பள்ளிகள் மூலம் உழவர் பயிற்சி தேவைகளை பொதுத்துறை பூர்த்தி செய்கிறது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மலைப்பாங்கான மற்றும் உருளும் நிலப்பரப்பில் காய்கறி வளரும் நிலங்களில் இந்த அணுகுமுறை செயல்படுத்தப்பட்டது: ஈர மண்டலம் (>2500 மிமீ) இடைநிலை மண்டலம் (1750-2500 மிமீ-குறுகிய வறண்ட காலம்). இந்தப் பகுதிகளில் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது. மேலும், விவசாய இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு விவசாயிகளிடையே பொதுவானது.

Approved final

பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளுடன் பங்கேற்பு நில மறுசீரமைப்பு நில - வளங்களின் நிலைபேறான பயன்பாட்டை உறுதிப்படுத்த முடியும். விவசாய வனவளர்ப்பு, மண் பாதுகாப்பு மற்றும் மண் வளத்தை மேம்படுத்தும் நடைமுறைகள் போன்ற அணுகுமுறை நிலைபேறான நில முகாமைத்துவ தொழில்நுட்பங்களை ஊக்குவித்தது, இதில் இலக்கமுறை கருவிகள் மற்றும் விவசாயி களப் பாடசாலைகள் (குகுளு) பயிற்சி மற்றும் வளங்களை வழங்குதல், அறிவைப் பகிர்தல், விவசாயிகளின் சந்தையை நோக்கியதாக மேம்படுத்துதல் ஆகியவை ஊடாக துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, மற்றும் இலங்கையின் மத்திய மலைநாட்டில் சீரழிந்த சிறு தேயிலை தோட்டங்களின் மறுவாழ்வு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணித்து மதிப்பீடு செய்தல்.

Approved final

நில பயன்பாட்டுத் திட்டமிடலுக்கான நுண்ணீர்நிலை அடிப்படையிலான பங்கேற்பு அணுகுமுறையானது, நிலையான நில முகாமைத்துவத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப கிராம நில வளங்களை உகந்த முறையில் ஒதுக்கீடு செய்வதில் முதன்மையாக கவனம் செலுத்தும் முறையான மற்றும் ஊடாடும் செயல்முறையாகும்.

பல துறைகளின் ஒருங்கிணைப்பு, பல பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் பங்கேற்பு நில பயன்பாட்டு திட்டமிடல் செயல்முறை முழுவதும் நில பயனாளிகளின் சுறுசுறுப்பான பங்கேற்பு ஆகியனவே இந்த அணுகுமுறையின் முக்கிய அம்சங்களாகும்.

சபுகசுல்பாத/ கலயாட கந்துர நுண் நீர்நிலையானது இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் (DS) அமைந்துள்ளது. நிலையற்ற நில முகாமைத்துவ நடைமுறைகள் நில அமைப்பழிவடைவுக்கு வழிவகுத்துள்ளன, இதனால் உணவுப் பாதுகாப்பிற்கான சவால்கள் மற்றும் விவசாயத்திற்கான பொருளாதார வருமானமின்மை அதிகரித்துள்ளது. மேலும், “உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தினால்” நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் அமைப்பழிவடைந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான உத்திகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருந்தது. 2018 இல், அமைப்பழிவடைந்த விவசாய நிலங்களின் மறுவாழ்வுத் திட்டம் (RDALP) இந்த நுண்ணிய நீர்நிலைகளுக்கு பங்கேற்பு நில பயன்பாட்டுத் திட்டமிடல் (PLUP) அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது.

 

Approved final

தொழில்நுட்பத்தின் வரைவிலக்கணம்:

பயிர்-கால்நடை ஒருங்கிணைப்பு ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் மண்ணின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது: மாட்டு எருவிலிருந்து தயாரிக்கப்பட்ட திட மற்றும் திரவ கரிம உரங்கள் மண்ணில் அல்லது காய்கறிகள் மற்றும் தேயிலை இலைகளில் சேர்க்கப்படுகின்றன.

விளக்கம்:

இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள தொழுவ பகுதியில் கறவை மாடு வளர்ப்பு பொதுவானது. விவசாயிகள் பொதுவாக பால் நுகர்வு மற்றும் விற்பனைக்காக சுமார் 2-3 ஹெக்டேயரில் 3-4 பசுக்களைக் வைத்திருக்கிறார்கள். நேர்காணல் செய்யப்பட்ட நில உரிமையாளர் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை: மாடுகள் வனப்பகுதிகளில் மேய்ந்தன, மேலும் தண்ணீர் மற்றும் கூடுதல் தீவனம் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை. வீடுகள் போதுமானதாக இல்லை.